இந்தூரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அங்கு மேலும் ஒரு தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு கண்ட்வா சாலையில் உள்ள ராதா சுவாமி சத்சங் வியாஸ் மைதானத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அவசர காலம் கருதி இரு தினங்களில் இந்த மையத்தை அமைக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
'முதல் கட்டத்தில் 500 படுக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 50 படுக்கைகளைக் கொண்ட 10 தொகுதிகள் இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள். இரண்டாவது கட்டத்தில், படுக்கைகளின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரிக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிக்கப்படும்' என்று கரோனா கண்காணிப்பு நோடல் அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர்தெரிவித்தார்.
இந்த மையத்தில் நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


