இமாச்சலப் பிரதேசத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கரோனா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 13 முதல் மே 10ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைத்து மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இளங்கலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு அட்டவணைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற மாநிலங்களும் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


