தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா தடுப்பூசி திருவிழா: தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தும் வகையில் தடுப்பூசி திருவிழாவை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதையடுத்து தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

News image
கரோனா தடுப்பூசி திருவிழா: தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Updated On :15 ஏப்ரல் 2021, 9:01 am

DIN

புது தில்லி: கரோனா தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தும் வகையில் தடுப்பூசி திருவிழாவை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதையடுத்து தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் இந்தியா பல உச்சங்களை அடைந்து வருகிறது. 

ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததால், நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பணியிடங்களில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

வழக்கமாக ஒவ்வொரு நாளும், சராசரியாக 45,000 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டன. ஆனால், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் 63,800 தடுப்பூசி மையங்களும், இரண்டாம் நாளில் 71,000 மையங்களும், மூன்றாம் நாளில் 67,893 மையங்களும், நான்காம் நாளில் 69,974 மையங்களும் செயல்பட்டன. வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக (சுமார் 16 லட்சம்) இருக்கும். ஆனால், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்று கிழமை அன்று இரவு எட்டு மணி வரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசி திருவிழாவின் நான்கு நாள்களில், தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்தது. முதல் நாளான ஏப்ரல் 11ம் தேதி 29,33,418 தடுப்பூசிகள் போடப்பட்டன. மறுநாள் 40,04,521 தடுப்பூசிகளும், ஏப்ரல் 13ம் மற்றும் 14ம் தேதிகளில் முறையே 26,46,528 மற்றும் 33,13,848 தடுப்பூசிகளும் போடப்பட்டன.

தடுப்பூசி திருவிழாவில் நாடு முழுவதும் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1,28,98,314. மூன்று மாநிலங்களில், இதுவரை மொத்தம் ஒரு கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 1,11,19,018 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 1,02,15,471 தடுப்பூசிகளும், மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 1,00,17,650 தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.