ஆந்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
ஆந்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.


ஆந்திரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மதுரவாடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பங்காருநாயுடு (50). இவரது பிளாட்டில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் காவல்துறையினர், தீயணைப்புதுறையினருடம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் பங்காருநாயுடு உள்பட 4 பேரும் உடல் கருகிய நிலையில் இறந்திருந்தனர். இதையடுத்து அவர்களின் சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் பங்காருநாயுடு பஹ்ரைனில் இருந்து தனது குடும்பத்தினருடன் விசாகப்பட்டினத்தில் குடியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...