தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

படுக்கைகளும் இல்லை; தடுப்பூசிகளும் இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி
Updated On :15 ஏப்ரல் 2021, 8:09 am

DIN

மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருந்தாலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதாக பல மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு மாநிலங்களில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகளுக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா பரிசோதனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர் இல்லை, ஆக்சிஜன் இல்லை, கரோனா தடுப்பூசியும் இல்லை, தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு செய்கிறார். பிஎம் கேர்ஸ் எங்கே? என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.