நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வரின் சகோதரி கைது!

ஹைதராபாத்தில் சந்திரசேகர் ராவ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:09 am

DIN

ஹைதராபாத்தில் சந்திரசேகர் ராவ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த சில  வருடங்களாக வெளியாகவில்லை என்று கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞருக்கு நீதி கேட்டும் 7 வருடங்களாக வெளியிடாத அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் கோரி தெலங்கானா அரசுக்கு எதிராக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஹைதராபாத் காவல்துறையினர் இன்று பிற்பகல் கைது செய்தனர்.

முன்னதாக, 3 நாள்கள் போராட்டம் நடத்த ஷர்மிளா அனுமதி கேட்டிருந்த நிலையில், ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் காவல்துறை கைது செய்து எங்கு கொண்டு சென்றாலும் அவ்விடத்தியிலேயே எனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடருவேன் என்று அவர்  கூறியுள்ளார். 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா
தெலங்கானா அரசியலில் விரைவில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.