நாடு முழுவதும் இதுவரை 12 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
காலை 7 மணி நிலவரப்படி இதுவரை மொத்தமாக 11,99,37,641 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் 8 மாநிலங்களில் மட்டும் இதுவரை 79.32 சதவிகித கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 91,05,429 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பு மருந்தும், 56,70,818 பேருக்கு 2-ம் தவணை தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டோரில் 4,49,35,011 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 34,88,257 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இதேபோன்று 45 வயதுக்கு மேற்பட்டோரில் 3,92,23,975 பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசியும், 9,61,510 பேருக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


