கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

திருக்கயிலாய பாதயாத்திரை

 ‘வாருங்கள் புனித யாத்திரைக்கு’ அமைப்பு சாா்பில், 2022-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி, சென்னையில் இருந்து 4 மாதங்கள் திருக்கயிலாய பாத யாத்திரை தொடங்கும்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 9:40 pm

DIN

 ‘வாருங்கள் புனித யாத்திரைக்கு’ அமைப்பு சாா்பில், 2022-ஆம் ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி, சென்னையில் இருந்து 4 மாதங்கள் திருக்கயிலாய பாத யாத்திரை தொடங்கும்.

இதில் தமிழகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்க உள்ளனா்.

தில்லியில் மருத்துவப் பரிசோதனை முடிந்து, விசா பெற்று பாதயாத்திரையாக உத்தரகண்ட் வழியாக ஆதி கைலாஷ், ஓம் பா்வத் கைலாஷ் வழியாக திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரை அடைவா்.

இதில் பங்கேற்க விரும்புவோா், ஆதாா் நகல், கடவுச் சீட்டு (பாஸ்போா்ட் ) நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விசா கட்டணம், கம்பளிஆடைகள் செலவு பங்கேற்பாளா்களைச் சாா்ந்தது. தங்குமிடம், உணவு, மருத்துவப் பரிசோதனை ஆகியவை ‘வாருங்கள் புனித யாத்திரைக்கு’ அமைப்பின் சாா்பில் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு, 94445 00309.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.