அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தெலங்கானாவில் புதிதாக 4,446 பேருக்குத் தொற்று

தெலங்கானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image

தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டியது கரோனா பாதிப்பு

Updated On :17 ஏப்ரல் 2021, 5:51 am

தெலங்கானாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 4,446 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 3.46 லட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்று காரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 1,809 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,414 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் இதுவரை 3,46,331 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்து தற்போது 33,514 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரேநாளில் 74,274 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 3.11 லட்சம் பரிசோதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.