நாட்டில் கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தின விழா நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியா வரவிருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இம்மாத இறுதியில் இந்தியா வருவதாக இருந்தது. பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்குப் பிறகு, போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முக்கியமான பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


