ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கர்நாடகத்தில் 15 ஆயித்தைத் தாண்டிய தினசரி கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 15,785 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஏப்ரல் 2021, 3:40 pm

DIN

கர்நாடகத்தில் புதிதாக 15,785 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,785 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,61,065-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு  1,42,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து  7,098 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 10,21,250-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 146 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,497-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.