ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :20 ஏப்ரல் 2021, 9:30 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. கரோனா தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அவர் தனது அலுவலகப் பணிகளை தனது வீட்டிலிருந்தே மேற்கொள்வார் என அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இதுவரை மொத்தம் 8,77,146 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.