புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராகுல் காந்திக்கு கரோனா தொற்று

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
ராகுல் காந்தி(கோப்புப்படம்)
Updated On :20 ஏப்ரல் 2021, 11:43 am

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமீபத்தில் ராகுல் காந்தி மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.