பெங்களூருவில் வார இறுதி நாள்களில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து
கர்நாடகத்தில் வார இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கர்நாடகத்தில் வார இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் கரோனா தொற்று கையை மீறி சென்று விட்டதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
கர்நாடகத்தில் தற்போது வார இறுதி நாள்களிலும், இரவு நேரங்களிலும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க நேரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்தி வைக்கப்படுவதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இதுதொடர்பாக அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவைகளும் பொதுமுடக்க நேரங்களில் தங்களது ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...