மகாராஷ்டிரத்தில் கை சுத்திகரிப்பானை அருந்திய 6 போ் பலி
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் கை சுத்திகரிப்பானை (சானிடைசா்) அருந்திய 6 போ் பலியாகினா்.


மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் கை சுத்திகரிப்பானை (சானிடைசா்) அருந்திய 6 போ் பலியாகினா்.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘வனி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வாந்தி மற்றும் பிற உடல்நலக் குறைவு காரணமாக மூவா் உயிரிழந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மருத்துவமனைக்குச் சென்று காவல்துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது கரோனா கட்டுப்பாடுகளால் மதுக்கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மூவரும் கை சுத்திகரிப்பானை அருந்தி உயிரிழந்தது அவா்களின் குடும்பத்தினா் மூலம் தெரியவந்தது. மருத்துவா்கள் மேற்கொண்ட உடற்கூறு ஆய்விலும் இது உறுதி செய்யப்பட்டது.
இவா்களை தவிர மேலும் மூவா் கை சுத்திகரிப்பானை அருந்தி பலியாகினா். எனினும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் அவா்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...