டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

News image
தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் புறக்கணிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 8:05 pm

DIN


புது தில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் மாநில மொழிபெயர்ப்புகளை மத்திய அரசு இன்று வெளியிட்டிருக்கும் நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் புதிய தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டிப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த 1986-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட 34 ஆண்டுகள் பழைமையான தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன் மூலம் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களும், கல்வியாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பல மாநிலங்கள், இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.

இந்த நிலையில், புதிய தேசியக் கொள்கை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மத்திய அரசு பதிவேற்றம் செய்துள்ளது. ஆனால், புதிய தேசியக் கொள்கை  தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.