சூரத் மருத்துவமனை தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 4 பேர் பலி
சூரத் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.


சூரத் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள நோயாளிகளை ஸ்மிம்மர் மருத்துவமனைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. எனினும் இந்த விபத்தில் நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

சூரத் மாநகராட்சியின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆஷிஷ் நாயக் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் 10 கரோனா நோயாளிகள் இருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் பல்காரில் கரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...