உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி
உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், பரிசோதனைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என பல பிரச்னைகளை தில்லி எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவலை சமாளிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள தலைமை நீதிபதி என்.வி.ரமணா அனுமதி அளித்துள்ளார்.
வருகிற மே 7 ஆம் தேதியிலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, இந்த விடுமுறை காலத்தில் உச்சநீதிமன்ற வளாகத்தில் கரோனா சிகிச்சை பணிகளை மேற்கொள்ளலாம் என மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்த பிறகு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...