கரோனா தடுப்பு மருந்துகள்: டிரோன் மூலம் விநியோகிக்க தெலங்கானா அரசுக்கு அனுமதி
கரோனா தடுப்பு மருந்துகளை சோதனை முயற்சியாக டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
கரோனா தடுப்பு மருந்துகளை சோதனை முயற்சியாக டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த அனுமதியை அளித்துள்ளன. ஒரு வருடம் வரையிலோ அல்லது மேற்கொண்டு உத்தரவு வரும் வரையிலோ இந்த அனுமதி அமலில் இருக்கும் என்றும் அனைத்து நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டிரோன்களை பயன்படுத்தி கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிப்பது குறித்து ஐஐடி கான்பூர் உடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தடுப்பு மருந்துகளை வேகமாக விநியோகிப்பதற்கும், மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் இந்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...