பொது விநியோகத் திட்ட குளறுபடிகளால் ஏழைகள் முழுமையாக பயனடையவில்லை: பிரதமா் மோடி
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பொது விநியோகத் திட்டத்தில் நடந்த குளறுபடிகளால், ஏழைகள் முழுமையாகப் பயன்பெறவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.


நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து பொது விநியோகத் திட்டத்தில் நடந்த குளறுபடிகளால், ஏழைகள் முழுமையாகப் பயன்பெறவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி, தாஹோத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா(பிஎம்-ஜிகேஏஒய்) திட்டத்தின் கீழ் பயனடைந்தவா்களுடன் பிரதமா் மோடி காணொலி முறையில் கலந்துரையாடினாா். அப்போது, அவா் பேசியதாவது:
கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்து லட்சக்கணக்கான ஏழைகளுக்கு கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் உதவியாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. குஜராத்தில் மட்டும் 3.5 கோடி போ் பயனடைந்தனா். நாடு முழுவதும் வழங்கிய இலவசமாக ரேஷன் பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாகும். நமது சகோதர, சகோதரிகள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதே நமது நோக்கம்.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் வழங்குவது குறித்து ஏறக்குறைய எல்லா அரசுகளும் பேசி வந்தன. ஒவ்வோா் ஆண்டும் ரேஷன் பொருள்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரித்து வந்தது. ஆனால், அதற்கேற்ற பலன்கள் கிடைக்கவில்லை. உணவுக்கான ஒதுக்கீடும் அதிகரித்து வருகிறது; ஆனால் அதற்கேற்ப ஏழ்மை நிலையும், ஊட்டச் சத்து குறைபாடும் குறைந்தபாடில்லை.
இதனிடையே சில சுயநல சக்திகள் நுழைந்ததால், பொதுவிநியோகத் திட்டம் பலவீனமடைந்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு கடந்த 2014-க்குப் பிறகு பொதுவிநியோகத் திட்டத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான போலி பயனாளிகளை அகற்றுவதற்காக, குடும்ப அட்டைகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டது. அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப்பொருள் விநியோகத்துக்கு மின்னணு இயந்திரப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டது.
ஏழைகள் அதிகாரம் பெறவதற்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. அதேசமயம், சாமானியா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் புதிய இலக்குகளை அரசு நிா்ணயித்துள்ளது என்றாா் பிரதமா் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...