கேரளத்தில் புதிதாக 22,040 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 22,040 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 22,040 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,040 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34.93 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 117 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை17,328ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 20,046 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 32,97,834ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்கலாமே | சுதந்திர தின விழா ஒத்திகை: சென்னையில் ஆக.7, 9, 13-ல் போக்குவரத்து மாற்றம்
தற்போதைய நிலவரப்படி 1,77,924 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 4,81,157 பேர் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று ஒரேநாளில் 1,63,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 2.80 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...