மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

'கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு 2 மடங்காகலாம்' 

கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார். 

News image
'கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு 2 மடங்காகும்'
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:24 am

DIN


திருவனந்தபுரம்: கேரளத்தில் வரும் நாள்களில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளத்தில் தற்போது பாதிக்கப்படும் 90 சதவீத கரோனா நோயாளிகள், அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள். நாடு மூன்றாவது கரோனா அலையின் தொடக்கத்திலிருக்கும் நிலையில், மாநிலம் இன்னும் இரண்டாவது கரோனா அலையிலிருந்தே மீளவில்லை. கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

மாநில மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பிறகே, கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு சிந்திக்க முடியும். உடனடியாக தளர்வுகளை நீக்குவதால், மாநிலம் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதிருக்கும். தற்போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிதான், மாநிலத்தில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.