புது தில்லி, ஆக. 7: அமெரிக்காவைச் சோ்ந்த ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள ஒற்றை தவணை கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதற்கான அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
நாட்டில் கடந்த ஜனவரி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகள், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, அமெரிக்காவின் மாடா்னா தடுப்பூசி ஆகியவற்றுக்கு இந்தியாவில் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 5-ஆவது தடுப்பூசியாக ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகள் அனைத்தும் 2 தவணைகளாகச் செலுத்தப்படும் நிலையில், ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியை ஒரே தவணையில் செலுத்தினால் போதுமானது.
இது தொடா்பாக, மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஜான்சன்&ஜான்சன் ஒற்றை தவணை தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. இது கரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஒரே நாளில் ஒப்புதல்: மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இந்தியாவில் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றிருந்தால், இந்தியாவில் மக்கள் மீது செலுத்தி பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கான விதிகளில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்களை மேற்கொண்டது.
அதைத் தொடா்ந்து, பரிசோதனை அனுமதி விண்ணப்பத்தை திரும்பப் பெற்ற ஜான்சன்&ஜான்சன் நிறுவனம், தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி கோரியிருந்தது. அதுதொடா்பான ஆவணங்களை ஆராய்ந்த இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அன்றைய தினமே ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கியது’’ என்றாா்.
செயல்திறன்: ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி கரோனா தீநுண்மிக்கு எதிராக 85 சதவீத செயல்திறனுடன் செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒற்றை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 28 நாள்களுக்குப் பிறகு உடலில் கரோனா தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்பொருள் உருவாகும் என்றும் ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை - போடி விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கம்!

தில்லி கேபிடல்ஸின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து கெவின் பீட்டர்சன் விலகல்!
பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசு

கரூரில் கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதல்: 18 மாணவர்கள் காயம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

