தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் புதிதாக 66 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை என்பதும் பதிவாகியுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 67,316 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 66 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.10 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.ட
இதையும் படிக்க | இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்
மேலும் 95 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,36,761 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,11,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 536 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,19,942 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 1,06,75,513 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 77,40,202 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 29,35,311 பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...