இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  
இனி வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி சான்றிதழ்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், 90131 51515 வாட்ஸ்அப் எண்ணில் covid certificate என அனுப்ப வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழை நொடிகளில் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 50.68 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,51,292 முகாம்களில் 50,68,10,492 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 55,91,657 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com