மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கேரளத்தில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 3:11 pm

DIN

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,607 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,051, திரிசூரில் 2,472, கோழிக்கோட்டில் 2,467 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,52,525ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 93 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 17,747ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 20,108 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,57,687ஆக உயர்ந்தள்ளது.

தற்போதைய நிலவரப்படி 1,76,572 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,34,196 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 2,85,14,136 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ன. பல்வேறு மாவட்டங்களில் 4,90,858 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.