மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

‘நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 51% போ் கேரளத்தில் உள்ளனா்’

நாட்டில் கடந்த ஏழு நாள்களாக பதிவாகும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 51 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கேரளத்தில் உள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்தது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:34 pm

DIN

நாட்டில் கடந்த ஏழு நாள்களாக பதிவாகும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 51 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கேரளத்தில் உள்ளனா் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த இரண்டு வாரங்களாக 9 மாநிலங்களில் உள்ள 37 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் கேரளத்தில் 11 மாவட்டங்களும், தமிழகத்தில் 7 மாவட்டங்களும் அடங்கும்.

11 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

கடந்த ஏழு நாள்களில் நாட்டில் பதிவான கரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 51.51 சதவீத அளவு கேரளத்தில் பதிவாகி உள்ளது.

ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. நாட்டில் தினசரி கரோனா பரவல் நிலைப்பெற்றுள்ள போதிலும், பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.

டெல்டா பிளஸ் கரோனா பிரிவுக்கு இந்தியாவில் இதுவரை 84 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 34 போ் மகாராஷ்டிரத்தில் உள்ளனா் என்றாா்.

கரோனா அதிகரித்து வரும் 37 மாவட்டங்கள்
1. கேரளம் - மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம், கண்ணூர், காசர்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா, இடுக்கி
2. தமிழ்நாடு - சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர்
3. ஹிமாசல பிரதேசம் - ஹமீர்புர், கான்கரா, பிளாஸ்பூர், சம்பா, மண்டி, சிம்லா
4. கர்நாடகம் - கொடகு, உத்தர கன்னடா, சாமராஜநகரா, தக்ஷிண கனனடா, உடுப்பி
5. ஆந்திர பிரதேசம் - ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி
6. மகாராஷ்டிரம் - சோலாபூர், பீட்
7. மேற்கு வங்கம் - 24 பர்கனா வடக்கு, நாடியா
8.மேகாலயம்-மேற்கு காஸி மலைப்பகுதி
9. மிஸோரம் - சாய்ஹா
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.