வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு

தில்லியில் புதிதாக 37 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு.  புதிதாக எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

News image
தில்லியில் குறைந்தது கரோனா: புதிதாக 37 பேருக்கு பாதிப்பு
Updated On :11 ஆகஸ்ட் 2021, 2:47 pm

DIN

தில்லியில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தில்லியில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,36,889-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 47 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 14,11,327-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. எனினும் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,068-ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 494 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.