எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் ட்விட்டர் தகவல்

சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அடையாளத்தை வெளியிட்டதற்காக ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஆகஸ்ட் 2021, 12:07 pm

DIN

சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் அடையாளத்தை வெளியிட்டதற்காக ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளியிட்ட காரணத்தால் ராகுல் காந்தியின் பதிவு நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அடையாளத்தை வெளியிட்டதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இன்று நடைபெற்ற விசாரணையில், ட்விட்டர் தரப்பில் "எங்களின் விதிகளை மீறி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். எனவே, அப்பதிவை நீக்கி அவரின் ட்விட்டர் பக்கத்தை நிறுத்தினோம்.

ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக மனுதாரர் தவறான வழக்கை தொடுத்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் டி.என். படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ராகுல் காந்திக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும், அவருக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.