தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

‘அமளியால், இரவு தூக்கம்கூட வரவில்லை’: வெங்கையா நாயுடு வேதனை

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவையின் புனிதம் கெடுவதாக கூறிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

News image
வெங்கையா நாயுடு வேதனை
Updated On :11 ஆகஸ்ட் 2021, 6:32 am

DIN

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து மாநிலங்களவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து 17வது நாள் கூட்டம் தொடங்கியவுடன் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், நேற்றைய தினம் சில உறுப்பினர்கள் மேஜைகள் மீது ஏறி காகிதங்களை கிழித்தது அவையின் புனிதம் சிதைக்கப்படுவதாக கூறினார். இந்த செயல்களை நினைத்து இரவில் தூங்கக்கூட முடியவில்லை என பேசினார். 

இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு கோஷங்கள் எழுப்ப தொடங்கியவுடன் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.