
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 45 வயதுமிக்க இஸ்லாமியர் ஒருவர் மீது அவரது இளைய மகளின் கண்முன் 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லியபடியே சாலையில் நடந்து செல்லுமாறு ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பஜ்ரங் தளம் கூட்டம் நடத்தி வந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, காவல் துறையினரின் இடையூறால் தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த இஸ்லாமியரை தாக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கான்பூர் காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"தாக்குதலில் பாதிப்புக்குள்ளானவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் நபர் ஒருவர், அவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."
காவல் துறையிடம் அளித்த புகாரில் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இ-ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்தபோது சிலர் என்னை இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். காவல் துறையினரால் நான் காப்பாற்றப்பட்டேன்."
ஹிந்துப் பெண்ணை மதம் மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகத் தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம்சாட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.