ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உத்தரப் பிரதேசம் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய 600 கிராமங்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில்  தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது

News image
உத்தரப் பிரதேசம் : கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய 600 கிராமங்கள்
Updated On :13 ஆகஸ்ட் 2021, 9:22 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மழை பதிவாகியிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கனமழையால் கங்கா, யமுனா நதிகளில் உருவான வெள்ளப் பெருக்கினால் அதை ஒட்டியிருந்த மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட  கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கிறது. 

இந்நிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ததோடு நிவாரணப் பணியை அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை தேசிய பேரிடர் மீட்புப்படை மூலம் வழங்கி வந்தார்கள் தற்போது இந்திய ராணுவமும் மீட்புப்படையுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.