பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

நாட்டில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:13 am

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,21,92,576 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 37,927 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 493 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,13,76,105 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,31,225 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 3,85,336 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 73,50,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 54,38,46,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.