இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருக்கிறது.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவை சந்தித்து வந்த இமாச்சலில் கடந்த 11 ஆம் தேதி கின்னாரில் 30 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற அரச பேருந்து நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது .
இதையும் படிக்க | நாட்டில் 54.58 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு
உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளே சிக்கியிருந்தவர்களை காப்பாற்றினாலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததால் சிலர் இறந்தனர்.
இந்நிலையில் காலை மேலும் இரண்டு சடலங்களை மீட்ட மீட்புப்படையினர் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருப்பதை உறுதி செய்தனர்.
தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு முன்வந்திருக்கிறது.
முன்னதாக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 தரப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


