நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘இதுவரை 56.57 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

நாட்டில் இதுவரை 56.57 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 3:47 pm

DIN

நாட்டில் இதுவரை 56.57 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 56 கோடிக்கும் அதிகமானோருக்கு (56,57,32,128) கரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 48.81 லட்சத்திற்கும் அதிகமான (48,81,588) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

18-44 வயது பிரிவில் இதுவரை 25,93,571 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,77,183 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 43,94,62,647 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 12,62,69,481 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1,14,39,788 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 9,55,984 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.