கரோனா விதிமீறல்: அரபு அமீரகத்திற்குள் நுழைய இண்டிகோ விமானங்களுக்கு தடை
கரோனா விதிகளை மீறியதால் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ஆகஸ்ட் 24 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


கரோனா விதிகளை மீறியதால் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ஆகஸ்ட் 24 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பயணிகளுக்கு அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்கள் கரோனா பரிசோதனை செய்யாமல் சென்றதால், ஆகஸ்ட் 24 வரை இண்டிகோ விமானங்கள் அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஆகஸ்ட் 24 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...