கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

'சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிக்கின்றனர்' - உ.பி. முதல்வர் பேச்சு

சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 9:55 am

DIN

சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும் நிலையில் சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.  

முன்னதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க், 'தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்களும், அவர்களின் தலைமையின்கீழ் இருக்கவே விரும்புகிறார்கள்' என்று தெரிவித்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 

ஆனால் சமாஜ்வாதி எம்.பி. பார்க், தன்னுடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.