
பெங்களூரு: நாட்டிலேயே கரோனாவுக்கு அதிக மரணங்கள் நிகழ்ந்த மாவட்டங்களின் பட்டியலில், இரண்டாவது இடத்திலிருந்த மும்பையை பெங்களூரு ஊரகப் பகுதி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
நாட்டிலேயே கரோனா பலி எண்ணிக்கையில் புணே தொடர்ந்து முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது பெங்களூரு ஊரகப் பகுதி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நிலவரப்படி, பெங்களூருவில் கரோனாவுக்கு 15,953 பேர் பலியாகியுள்ளனர். மும்பையில் கரோனா பலி எண்ணிக்கை 15,930 ஆகவும், புணேவில் 18,779 ஆகவும் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருந்தபோதும், அங்கு புணே, மும்பை மாவட்டங்களில் பாதிப்பு பரவலாக இருந்தது. ஆனால், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்தபோது, பெங்களூருவில் மட்டுமே பாதிப்பின் அளவு 43 சதவீதத்துக்கும் மேல் இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 36,571 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 3.63 லட்சமாகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.