சோம்நாத்தில் புதிய கோயில்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் அமையவிருக்கும் ஸ்ரீ சிவபாா்வதி கோயிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
சோம்நாத்தில் புதிய கோயில்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்
சோம்நாத்தில் புதிய கோயில்: பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்

புது தில்லி: குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் அமையவிருக்கும் ஸ்ரீ சிவபாா்வதி கோயிலுக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும், குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை காலை 11 மணிக்கு காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தொடக்கி வைத்தார்.

இதில், சோம்நாத் நடைபாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவை அடங்கும்.

ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான திட்டத்தின் கீழ் ரூ.47 கோடி மொத்த மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வசதி மைய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சோம்நாத் கண்காட்சி மையம், பழைய சோம்நாத் கோயிலின் பாகங்களையும், பழைய சோம்நாத்தின் நாகா் முறையிலான கோயில் கட்டடக் கலை சிற்பங்களையும் கொண்டுள்ளது.

ரூ.3.5 கோடி மொத்த மதிப்பீட்டில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயில் சிதிலமடைந்ததைக் கண்ட இந்தூா் அரசி அஹில்யாபாய் இந்தக் கோயிலை கட்டியதால் அஹில்யாபாய் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோயில் வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. ரூ. 30 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ சிவபாா்வதி கோயில் கட்டப்படவுள்ளது. சோம்புரா சலத்ஸ் முறையில் இக்கோயில் கட்டப்படவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா், மத்திய சுற்றுலா அமைச்சா், குஜராத் முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com