தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி இல்லை
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர்கூட நோய்த் தொற்றால் பலியாகவில்லை.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர்கூட கரோனா நோய்த் தொற்றால் பலியாகவில்லை.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 பேர் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை. அதேநேரம் 48 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் விகிதம் 0.03 சதவிகிதம்.
இதுவரை மொத்தம் 14,37,293 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14,11,784 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 25,079 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 430 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...