நீட்: தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
நீட்: தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-இல் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. நீட் தோ்வெழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14,714 போ் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 12,890 போ் விண்ணப்பித்துள்ளனா். 

அதில் தமிழ் மொழியில் தோ்வு எழுதுவோரின் எண்ணிக்கை 19,867-ஆக உள்ளது. அரசுப்பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 8,727 ஆக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 1 லட்சத்து 21,617 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் நிகழாண்டில் அது குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் மேலும் ஓ.எம்.ஆர்.தாளை பூர்த்தி செய்யும் நடைமுறை குறித்தும் இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com