கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களிடம் உரையாடிய முதல்வர்
கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களிடம் உரையாடிய முதல்வர்

கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு - மாணவர்களிடம் உரையாடிய முதல்வர்

கா்நாடக மாநிலத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கபட்டன.

இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. பின் கரோனா பாதிப்பு 2 சதவீதமாக இருக்கும் மாவட்டங்களில் 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரையிலான பள்ளி, கல்லூரிகளைத் திறக்க கா்நாடக அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில்  இன்று 9, 10, 11, 12-ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதேபோல, 11, 12-ஆம் வகுப்புகளை திறப்பதற்கு பியூ கல்லூரிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை   திடீர் வருகையாக ஒரு பள்ளியில் கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை ஆய்வு செய்த பின் அங்கிருந்த மாணவர்களிடம் உரையாடினார்.

பின் ' கரோனா தொற்று ஏற்படாத வகையில் பள்ளிகளில் தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com