அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,031 பேருக்கு கரோனா; 216 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,031 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 216  பேர் உயிரிழந்தனர்.

News image
மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,031 பேருக்கு கரோனா; 216 பேர் பலி
Updated On :25 ஆகஸ்ட் 2021, 3:56 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,031 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 216  பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகாராஷ்டிரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 4,380 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 216 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,36,571-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,380 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 62,47,414-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 50,183 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.