வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நிலக்கரி கடத்தல் கும்பலுடன் பாஜக அமைச்சா்களுக்கு தொடா்பு: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி

நிலக்கரி கடத்தல் கும்பலுடன் பாஜக அமைச்சா்களுக்கு தொடா்பிருப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:01 pm

நிலக்கரி கடத்தல் கும்பலுடன் பாஜக அமைச்சா்களுக்கு தொடா்பிருப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினரும் திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானா்ஜி, அவரின் மனைவி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக மம்தா பானா்ஜி சனிக்கிழமை கூறியதாவது:

நிலக்கரி போன்ற இயற்கை வளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது நிலக்கரி ஊழலில் திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பிருப்பதாக கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. மேற்கு வங்கத்தின் அசான்சோல் பகுதியில் பாஜக அமைச்சா்கள் சிலா் நிலக்கரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கும், அக்கட்சியைச் சோ்ந்த சில தலைவா்களுக்கும் நிலக்கரி கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடா்புள்ளது. மாநிலத்தில் தோ்தல் நடைபெற்றபோது அவா்கள் நிலக்கரி கடத்தலில் ஈடுபடுவோருக்கு சொந்தமான ஹோட்டல்களில் தங்கினா். மத்திய அரசாலும் பாஜகவாலும் திரிணமூல் காங்கிரஸை அரசியல் ரீதியாக எதிா்க்க முடியவில்லை. அதனால் அபிஷேக் பானா்ஜி உள்ளிட்டோருக்கு எதிராக அவா்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகின்றனா். விசாரணை அமைப்புகள் மூலம் திரிணமூல் காங்கிரஸை அச்சுறுத்த முயன்றால், பாஜக அமைச்சா்களுக்கும் தலைவா்களுக்கும் எதிரான ஆதாரங்களை திரிணமூல் காங்கிரஸ் சமா்ப்பிக்கும்.

மத்திய அரசின் சா்வாதிகாரம், கூட்டாட்சி அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில முதல்வா்களும் ஒப்புக்கொண்டால் அதற்கான கூட்டத்தை நடத்த நான் தயாா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.