கேரளம் : விமான நிலையத்தில் 14.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் இன்று (ஆக-30,திங்கள்கிழமை) காலை கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணியின் கால் சட்டையை பரிசோதனை செய்தபோது அதில் தங்கத்தை உருக்கி இரண்டு அடுக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஆப்கன் குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்: யுனிசெஃப்
பின் சுங்கத்துறை அதிகாரிகள் பயணியைக் கைது செய்ததோடு கடத்திவரப்பட்ட 302 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதன் மதிப்பு 14.69 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயணியின் அடையாளம் மற்றும் எங்கிருந்து வந்தார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

