குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநிலை பாதிப்பு இல்லை: மருத்துவர்கள்

ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தாய் துளசிக்கு மனநிலை பாதிப்பு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநிலை பாதிப்பு இல்லை: மருத்துவர்கள்
குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநிலை பாதிப்பு இல்லை: மருத்துவர்கள்

செஞ்சி அருகே குழந்தையை கொடூரமான முறையில் தாக்கும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தாய் துளசிக்கு மனநிலை பாதிப்பு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செஞ்சி அருகே குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்திய தாயை, ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவருக்கு மனநிலை பாதிப்பு ஏதேனும் இருக்குமோ என்ற அடிப்படையில், மனநல மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். இதில், அவருக்கு மனநிலை பாதிப்பு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பார்க்க: கருப்பழகி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் புகைப்படங்கள் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண் ஒருவா் தனது 2 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி காயப்படுத்துவது போன்ற விடியோ கட்செவி அஞ்சலில் வெளியாகி, அதிவேகமாகப் பரவியது. இதுதொடா்பாக சத்தியமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். 

அதில் தெரியவந்ததாவது: செஞ்சி அருகே மணலபாடியை அடுத்த மேட்டூரைச் சோ்ந்தவா் வடிவழகன், விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், ராம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த துளசி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த துளசி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகன் பிரதீபை கொடூரமான முறையில் தாக்கி அதை விடியோவாக பதிவு செய்திருந்தது தெரிய வந்தது.

தாய் தாக்கியதில் பலத்த காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தாா்.

குழந்தையை தாக்கியது தொடா்பாக, துளசி மீது காவலர்கள் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, கணவருடனான தகராறைத் தொடா்ந்து, ஆந்திரத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த துளசியை செஞ்சி அனைத்து மகளிா் நிலைய காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகுமாரி தலைமையிலான தனிப்படையினா் அங்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை மாலை துளசியை கைது செய்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com