மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தான் அணிக்கு இளம் தலைமைப் பயிற்சியாளர் நியமனம்?

உணவுத் திருவிழாவாகிறதா, ரமலான் நோன்பு?

ஆப்கனின் முதன்மை விமானப் படைத் தளத்தின் மீது பாக். தாக்குதல்!

நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில்! முழு விவரங்கள்..!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

