கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இன்று அறிவித்தது. மேலும் ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.
இதையும் படிக்க- ஒமைக்ரான் பாதித்த நாடுகளின் பட்டியலில் இணைந்தது இந்தியா
இந்த நிலையில் ஒமைக்ரான் பாதித்த 46 வயதான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 5 நபர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒமைக்ரான் உறுதியான 2 பேரில் ஒருவர் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என கர்நாடக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட இருவர் யார்? கர்நாடக அமைச்சர் விளக்கம்
கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வயது 66. மற்றொருவரின் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


