இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட இருவர் யார்? கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது செய்யப்பட்டுள்ள 2 பேரில் ஒருவர் மருத்துவர் என்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுள் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.சுதாகர் கூறினார்.

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2021, 3:15 pm


கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் மருத்துவர் என்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுள் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

"பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 46 வயது மிக்க நபர் ஒரு மருத்துவர். உடல் சோர்வு, உடம்பு வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளதையடுத்து, அவர் தாமாகவே பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவரது பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிடி மதிப்பீடு குறைவாக இருந்தது. பிறகு ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. மருத்துவருடன் தொடர்பிலிருந்தவர்களில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவருக்கும் எவ்விதத் தீவிர அறிகுறியும் தென்படவில்லை. அவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.

66 வயதுமிக்க நபர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் நாடு திரும்பிவிட்டார்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.