காங்கிரஸ் இன்றி பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகிவிடும் என்று கூறினார்.
தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக சரத் பவாா் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா என செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை’ என்று பதிலளித்தாா்.
மம்தாவின் இந்த பதில் தற்போது அரசியல் சூழ்நிலையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:
எங்களுடன் சேர விரும்புபவர்கள் வரலாம், சேர விரும்பாதவர்கள் செல்லலாம். எங்களுடைய போர் ஆளும் பாஜகவிற்கு எதிரானது. காங்கிரஸைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராகப் காங்கிரஸ் கட்சி மட்டுமே போராடி உள்ளது. நாங்கள் இல்லாமல் பாஜகவுக்கு எதிராக எந்த அரசியல் கூட்டணியும் சாத்தியமில்லை.
நாட்டில் அரசியல் சண்டைகளுக்கு சித்தாந்தமே முக்கிய காரணம். இந்தியாவில் இரண்டு வகையான சித்தாந்தங்கள் உள்ளன, ஒன்று காந்தி மற்றும் நேரு, மற்றொன்று 'சங்கம்' என்ற பெயரில் அரசியலில் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவது.
காங்கிரஸ் ஒருபோதும் மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தியதில்லை. கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ரா, ஜடேஜா முதலிடம்..! டாப் 10 பட்டியலில் ஜெய்ஸ்வால், கில்!

புதுவை முதல்வராக பொறுப்பேற்றார் ரங்கசாமி!

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
